
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமானை ஆதரிப்பது குறித்து தேர்தல் தேதி அறிவித்த பிறகு தெரிவிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பெருந்தன்மையுடன் தன்னை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வதாக சீமான் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா என அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.