
நயன்தாரா மற்றும் கவின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் 'மகுடம்' ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதால் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன.