
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மழை காரணமாக 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.