
தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான வல்லுநர் குழு தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவின் முதல் கட்ட அறிக்கை முதல்வர் விஜயிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2027 கோடையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதால், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றிமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.