
அமெரிக்காவின் மொன்டானா மாகாணம் பில்லிங்ஸ் பகுதியில் நடந்த விருந்தின் போது, 4 சிறுவர்கள் உட்பட 8 உறவினர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
கொல்லப்பட்டவர்களில் 90 வயது மூதாட்டி முதல் 7 வயது சிறுமி வரை அடங்குவர் என்றும், சம்பவம் நடந்த வீடு தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர் டேவிட் ஹில்லர் அளித்த தகவலின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.