
அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் முனீஸ்காந்த் நாயகனாக நடிக்கும் 'தி டோர்ம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
குட் ஸ்டப் புரொடக்சன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ இசையமைத்துள்ளனர்.
முனீஸ்காந்துடன் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.