
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 13 பேர் மீது நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1020 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் 258 பக்க அறிக்கையின் அடிப்படையில், டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
நேருவின் உதவியாளர் கவி பிரசாத்தின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 14 பிரிவுகளில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.