/polimer-news/media/media_files/2026/10/22/northeastmonsoon-2026-10-22-16-29-36.jpg)
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும், இயல்பை விட மழை அதிகமாக பொழியக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் வருகிற 26ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.