இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய நிர்வாக வாரியத்தில் பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குனராக 4 ஆண்டுகள் பதவி வகிக்க ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025 ஜனவரியில் இஸ்ரோவில் இருந்து ஓய்வுபெற்ற சோமநாத்தின் இந்த நியமனம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரியத்தில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்தராவின் பதவிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவும் இந்த வாரியத்தில் முக்கிய உறுப்பினராக உள்ளார்.