
மொபைல் டேட்டா சேவை தேவையில்லாத பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் உள்ளடக்கிய குறைந்த கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
இணையதள சேவைகளைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் தேவையில்லாத சேவைகளுக்காகக் கூடுதல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.