
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய மனுவில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து 9 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் அல்லது அதுவரை 100% VVPAT எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.