கர்நாடகாவில் உள்ள முன்னணி தனியார் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ளூர் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.
நிறுவனங்களின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கை, கன்னடர்களின் பங்களிப்பு மற்றும் ஆட்சேர்ப்புத் தரவுகள் போன்ற முழுமையான விவரங்களை வழங்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளது.