எலுமிச்சை டீயில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களின் எனாமலை பலவீனப்படுத்தி பற்கூச்சத்தை ஏற்படுத்தும் என்பதால், குடித்தவுடன் தண்ணீரால் வாயைக் கொப்பளிப்பது அவசியமாகும்.
வெறும் வயிற்றில் எலுமிச்சை டீ அருந்துவது செரிமான மண்டலத்தைப் பாதித்து நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்னைகளை உருவாக்கக்கூடும்.
அதிக சர்க்கரை சேர்த்து அருந்துவது உடல் எடை அதிகரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால், கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவோடு குடிப்பது நல்லது.