
கேரள மாநிலம் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 11.50 மணிக்கு கார் லாரி மீது மோதிய விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் யுவ சஞ்சித், சூர்யா, பிரசன்னா, விஷ்வா, சந்தோஷ் மற்றும் ஜோஸ்வா ஆகிய 6 பேரின் அடையாளம் அவர்களின் அடையாள அட்டைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாலை சீரமைப்புப் பணிகள் நடந்த இடத்தில் முன்னறிவிப்புப் பலகைகள் வைக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.