
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராம மக்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் காட்சிகள் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
படத்தில் பாப்பம்பட்டி என்ற பெயர்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றும் மத்திய திரைப்பட வாரியம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
சினிமாவில் கற்பனை தவிர்க்க முடியாதது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.