
பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்காததால், இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு தொழிலாளர் நல ஆணையம் சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஊழியர்களின் வேலை நேரத்தைப் பதிவு செய்யும் முறை துல்லியமாக இல்லாதது மற்றும் கூடுதல் பணி நேரத்தைக் கண்காணிக்கும் மென்பொருளில் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் தங்களது நிதிநிலை அல்லது வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.