
ஜிபூட்டியில் இருந்து 305 அகதிகளுடன் ஏமனுக்குச் சென்ற படகு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா வழியாகச் சென்றபோது நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 109 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஜிபூட்டி கடற்படையினர் 80க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர்.
சம்பவத்தில் 116 பேர் கடலில் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.