
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது, அத்தியாவசியப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.
சின்னசேலம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் 15 கி.மீ சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விருகாவூரில் 21 செ.மீ மழை பதிவானதுடன், கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.