
உலகின் 36 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 45 சதவீத மக்கள் இந்தியாவுக்கு ஆதரவான கருத்தையும், 41 சதவீத மக்கள் எதிர்மறையான கருத்தையும் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் பியூ ஆய்வு நிறுவனம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 42,000 மக்களிடம் நடத்திய ஆய்வில், இலங்கையில் அதிகபட்சமாக 79 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
பாகிஸ்தானில் 91 சதவீத பேர் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஆதரவு 2023-ல் 51 சதவீதத்திலிருந்து தற்போது 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.