
நடிகை திரிஷா குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் இதே மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகத் திரண்டிருக்கும் இந்த நற்பணி மன்றத்தின் செயல் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.