
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதிக்கு தா.மோ.அன்பரசன், க.சுந்தர் ஆகியோரும், தாராபுரம் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களாக மதுராந்தகத்தில் இ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.