
வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது, சீன தயாரிப்பு டைப்-59 கவச வாகனம் வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹதஸாரி படைதள மைதானத்தில் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த எதிர்பாராத வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.