
பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்பதற்கு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இளம் தலைமுறையினரை 'கரப்பான்பூச்சிகள்' என்று நீதிபதி விமர்சித்ததாகக் கூறப்படும் சர்ச்சை மற்றும் நல்சார் சட்டப் பல்கலை மாணவர்களுக்கு எதிரான பார் கவுன்சில் நடவடிக்கையே இந்த எதிர்ப்பிற்கு முக்கிய காரணம்.
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களை அழைத்து பட்டம் வழங்குவது மாணவர்களின் உழைப்பை அவமதிக்கும் செயல் என மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.