/polimer-news/media/media_files/2026/11/05/group4exam-2026-11-05-10-52-21.jpg)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 9.80 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.