
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸிங் குறித்த 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆவணப்படம், அஜித்தின் கார் பந்தய ஆர்வத்தை மையமாகக் கொண்டது.