
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தின்படி, நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளைத் தமிழில் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தமிழில் பேசுவதை ஆங்கிலத்தில் உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக முதல்வர் விளக்கமளித்தார்.