
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலகோட் பகுதியில் உமர் பாரூக் சதுக்கத்தைச் சுற்றியுள்ள இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது நடத்திய டிரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு பல மணி நேரம் நீடித்தது.
அடிப்படை உரிமைகள் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கடந்த ஜூன் மாதம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 153-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், முசாபராபாத் மற்றும் ராவலகோட் நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.