
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நியூசண்டிகாரில் இன்று நடைபெறுகிறது.
திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 405 ரன்கள் குவித்த போதிலும், சுப்மன் கில்லின் இரட்டை சதம் மற்றும் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா எளிதில் இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.