
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 69வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பரமக்குடியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், போக்குவரத்து முற்றிலும் மாற்றி விடப்பட்டது.