/nakkheeran/media/media_files/2026/10/29/kalaimks-2026-10-29-09-55-56.jpg)
சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான கலையரசன், தவெக எம்.எல்.ஏ குறித்த அவதூறு கருத்துப் பதிவிட்டதாகக் கூறி கடந்த புதன்கிழமை அதிகாலை சீருடை அணியாத போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும்போது எஃப்.ஐ.ஆர் காட்டப்படவில்லை என்றும் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் கலையரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு பாசிசத்தில் பாஜகவையே மிஞ்சுவதாகவும், கலையரஷிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.