International
முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டணியில் இணைய வங்கதேசம் பரிசீலனை

முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டணியில் இணைய வங்கதேசம் பரிசீலனை

Puthiyathalaimurai4h
THE BRIEF
1

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொண்டுள்ள முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டணியில் இணைய வங்கதேசம் ஆர்வம் காட்டி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கொபிர் தெரிவித்துள்ளார்.

2

தாக்குதல் நேரத்தில் பரஸ்பர உதவி ஒப்பந்தம் கொண்ட இந்த கூட்டணியில் வங்கதேசம் இணைவது தெற்காசிய பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

3

சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு வங்கதேசம் தனது நலன்களுக்காக இந்த கூட்டணியில் இணைவது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.