
பிரபல நடிகை ஒருவர், தான் காதலித்த வாரிசு நடிகர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அந்த வாரிசு நடிகரின் தந்தை, நடிகைகளைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்குமாறு மகனுக்குப் போதித்ததே இந்த டாக்ஸிக் உறவுக்குக் காரணம் என நடிகை தெரிவித்துள்ளார்.
மகன் செய்த தவறுகளைத் தட்டிக்கேட்காமல், மருமகளாக வரப்போகும் நடிகையின் உடை மற்றும் செயல்பாடுகளைக் குறித்து விஷமத்தனமான கருத்துகளைத் தந்தை விதைத்ததாக நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.