
டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வருகிறார்.
இந்த மாநாட்டில் ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா மற்றும் யுஏஇ உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் இடையே பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து எல்லை அமைதி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.