இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 11 பில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் டெங்கு ஒழிப்பு வோல்பெக்கியா திட்டத்தை தொடங்கியுள்ளன.
ஈடிஸ் எஜிப்ட் வகை நுளம்புகளின் முட்டைகளில் வோல்பெக்கியா பக்டீரியாவை செலுத்துவதன் மூலம், நுளம்புகள் வைரஸ்களை பரப்புவதை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளில் முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த நுளம்புகள் விடுவிக்கப்பட உள்ளன.