
மனைவியைப் பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன், தனது குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவரது மனைவி சுஜாதா நிபந்தனை விதித்துள்ளார்.
குழந்தைகளை ரவி மோகன் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்றும், பொது இடத்தில் மட்டுமே அவர் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்றும் சுஜாதா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை சிலர் அவமதிப்பதாகக் கூறிய ரவி மோகன், தான் உயிருடன் இருக்கும் வரை தனது குடும்பத்துடன் ஒரே அறையில் இருப்பது நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.