
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா, கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் அல்கஸார் கார்களில் பின் இருக்கை பயணிகளுக்காக 'லவுஞ்ச் எடிஷன்' மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எடிஷன்களில் 11.6-இன்ச் டச்ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிரத்யேக கோல்டன் பிரான்ஸ் நிறம் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கிரெட்டா விலை ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20.11 லட்சம் வரையிலும், அல்கஸார் விலை ரூ. 14.50 லட்சம் முதல் ரூ. 21.24 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.