/polimer-news/media/media_files/2026/10/16/7-2026-10-16-13-48-12.jpg)
பார்வை நேரம் குறைந்து வருவது மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக உலகளவில் 1,000 பணியிடங்களை குறைக்கப்போவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் பணிநீக்க நடவடிக்கையானது மொத்தப் பணியாளர்களில் சுமார் 6 சதவீதம் பேரைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மனிதவளம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களும் இந்தப் பணிநீக்கத்தில் அடங்குவர்.