
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமனம் மற்றும் பங்குச்சந்தை பட்டியல் விவகாரத்தில் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரவைக் குற்றம்சாட்டிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை மறுத்துப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, டாடா நிர்வாகிகளை அமித் ஷாவின் இல்லத்திற்கு அழைத்து விருந்தளிக்க வேண்டிய அளவிற்கு அப்படி என்ன விவகாரம் இருந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.