
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' திரைப்படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சரமூடுவின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
முந்தைய பாகத்தைப் போல இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்; இப்படத்தில் மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.