
டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரூ.25 கோடிக்கும் மேல் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படம், ஜூலை 31-ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
2021-ல் வெளியான 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படத்திற்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் டாம் ஹாலண்ட் நான்காவது முறையாக ஸ்பைடர்மேனாக இதில் நடித்துள்ளார்.