
நடிகை நித்யா மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கேயுரி புரொடக்ஷன்ஸ்' மூலம் லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய பேண்டஸி டார்க் காமெடி படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் டி.கே. இயக்கும் இந்தப் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்க, விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார்.
ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.