
பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.39 விலையில் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 20 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேபோல் ரூ.19 விலையில் 1 நாள் வேலிடிட்டியுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டமும், ரூ.58 விலையில் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் 8 ஜிபி டேட்டா வழங்கும் திட்டமும் உள்ளது.
இந்த டேட்டா வவுச்சர்களைப் பயன்படுத்திய பிறகு இணைய வேகம் 40 Kbps ஆகக் குறையும் என்றும், இவை அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.