
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரத்தில் செயல்பட்டு வரும் வாரி பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஒரு அறையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலை வளாகத்தில் இருந்த ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது.
சம்பவத்தின் போது உணவு இடைவேளை என்பதால் பணியாளர்கள் அறையை விட்டு வெளியே சென்றிருந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.