
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரும் டிசம்பர் 1-ம்தேதி முதல் 18 மாதங்களுக்கு இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளது.
முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிய பின்னரே இரண்டாவது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்படும் என அணு மின் கழகம் தெரிவித்துள்ளது.