
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5-வது சீசனாகும் என்பதும், இதில் வழக்கம்போல 5 அணிகள் பங்கேற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் நகரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.