
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 194 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 90 அடியைக் கடந்து 90.07 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 7,022 கன அடி நீர் வந்து கொண்டிருக்க, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 52.73 டிஎம்சியாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதிக்கு பிறகு இந்த நீர்மட்டத்தை அணை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.