சிறுநீரகத்தின் நெப்ரான் திசுக்கள் 80 சதவீதம் பாதிப்படைந்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படும் என்பதால், ரத்த பரிசோதனையில் கிரியாட்டினின் அளவு அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சோர்வு, பசியின்மை, கால்வீக்கம், மூச்சு திணறல், குமட்டல், வாந்தி மற்றும் சிறுநீர் நிற மாற்றங்கள் ஆகியவை சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளாக இருப்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது டயாலிசிஸ் நிலையைத் தவிர்க்க உதவும்.