
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் போலி என்கவுண்டர் என உடற்கூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 16-ம் தேதி மைசூர் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், கொல்லப்பட்டவர்கள் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்தே சுடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜான்ரோஸ் பீட்டரின் உடலில் 25 செ.மீ நீளத்திற்கு ஆழமான காயம் இருந்ததால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.