
சிறையில் உடல்நிலை மோசமடைந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரை ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி, செப்டம்பர் 16-ம் தேதி வரை உரிய சிகிச்சை அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இம்ரான் கான் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகளால் அவதிப்படுவதாக முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.