/nakkheeran/media/media_files/2026/11/04/459-2026-11-04-12-28-02.jpg)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான 'டோரதி' படம் பாலின பாகுபாடு மற்றும் சமூக ஒடுக்குமுறை போன்ற விஷயங்களைப் பேசி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநர் செந்தில் வேலன் ஏற்பாடு செய்துள்ள 'பாலின உணர்திறன் மற்றும் பாலினப் பொறுப்புள்ள காவல் பணிக்கு ஊடகமாகத் திரைப்படம்' என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் காவல் துறை அதிகாரிகளிடம் படம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.